உலக பாரம்பரிய தினம்- நாளை மாமல்லபுர சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்

மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புராதன சின்னங்களை நாளை(செவ்வாய்) கட்டணமின்றி பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் நாளை (18-04-2023 ) உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்ச்சுணன் தபசு,வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை நாளை(செவ்வாய்கிழமை) ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எவ்வித நுழைவு கட்டமணமின்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும், நாளை நுழைவு கட்டண கவுண்டர்கள் மூடப்படும் என்றும் மாமல்லபுரம் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயனி ஒருவருக்கு தலா 600 ரூபாயும், உள்நாட்டு பயணிக்கு தலா 40 ரூபாயும் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்