உலக முதலீட்டாளர் மாநாடு - முதல்வர் ஆலோசனை

 
stalin

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கும், தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் பயணித்து முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இதுதவிர, கடந்த 2021 முதல் தற்போது வரை பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜனவரி மாதம் 10, 11-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்கான பணிகளில் தற்போது தொழில்துறை மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன.

tn

இதையடுத்து சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறுகிறது. ஏற்கனவே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடுகள் இருக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

govt

இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வரும் 7, 8ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார்.