அடுத்த ஜென்மத்தில் வவ்வால், பெருச்சாளியாக பிறப்பீர்கள் - மதுரை ஆதீனம் கொடுத்த அட்வைஸ் சாபம்..

 
மதுரை ஆதீனம்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை தீவிரம் காட்டி வருகிறது.  அதன்படி இதுவரை 427 நபர்களிடமிருந்து  சுமார் 1,543 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் கோவில்களுக்குச் சொந்தமான  கடைகளின்  வாடகை பாக்கி, குத்தகை பாக்கி போன்றவையும் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருக்கோயில்களின் நிலம் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வாடகை, கடன்  தொகை செலுத்தாமல் இருப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் வவ்வால்களாகவோ, பெருச்சாளிகளாகவோத்தான் பிறப்பார்கள் என மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கிறார்.

மதுரை ஆதீனம்

சிவகங்கை மாவட்டம்  தஞ்சாக்கூரில் உ ள்ள ஸ்ரீ ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்பாள் கோயில் விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோவில் கடையில் இருந்து கொண்டு வாடகை கொடுக்காமல் இருந்தாலோ, கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ, பெருச்சாளியாகவோ அல்லது மூஞ்சூரு எலியாகவோதான் பிறக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

மதுரை ஆதீனம்

மேலும்,  தற்போது பலருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை. அதனால் நல்ல சம்பளம், அழகு இருந்தாலும் பெண் கிடைப்பதில்லை. பெண் கிடைத்தாலும் நல்ல மாமியார் கிடைப்பதில்லை. நல்ல மாமியார் கிடைத்தாலும் மருமகள் சரியாக இருப்பதில்லை என்று சரமாரியாக,   சாபம் கொடுக்கும் தொனியில் மதிரை ஆதீனம் அட்வைஸ் செய்திருப்பது  பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விழாவில்  தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர் ஜெயகாந்தன் , உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.