எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை எழுதியுள்ளார். மர்மதேசம், விடாது கருப்பு, ருத்ரவீணை, கிருஷ்ணதாசி, சிவமயம் என்பது போன்ற பல தொடர்கள் இவரது படைப்புகளாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சௌந்தர்ராஜன் கடந்த சில மாதங்களாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வீட்டில் கழிவறையில் இந்திரா சௌந்தர்ராஜன் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சௌந்தர்ராஜனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினார். இந்திரா சௌந்தர்ராஜன் சௌந்தரராஜன் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


