ரஜினி மீது வன்மம் கக்கும் எழுத்தாளர்கள்

 
ra

நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரஜினி அந்த திரைப்படத்தில் சம்பந்தப்பட்டவர்களை தொலைபேசியில் அழைத்து,   நேரில் அழைத்து பாராட்டுவதை பல காலமாக தனது வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  அப்படித்தான் அண்மையில் வெளியான அயோத்தி மற்றும் விடுதலை திரைப்படங்களை பார்த்துவிட்டு சம்பந்தப்பட்ட கலைஞர்களை நேரில் அழைத்து வாழ்த்தியதோடு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

r

 தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்த படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.   பொதுவாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் எப்போதாவது தான்,  ரொம்ப முக்கியமான தருணங்களில் மட்டுமே ரஜினிகாந்த் வருவார்.  ஆனால் விடுதலை, அயோத்தி இரண்டு படங்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பல காலமாக பல திரைப்படங்களை பார்த்து ரஜினி பாராட்டி வரும் நிலையில்,  ரஜினி பாராட்டுவதை பத்திரிகைகள் ஊடகங்களில் வெளியிட்டு சம்பந்தப்பட்ட கலைஞர்கள் மகிழ்வதோடு,  அதை தங்களுக்கு கிடைத்த விளம்பரமாகவே நினைத்து மகிழ்வதும் உண்டு. ஆனால் தற்போது வழக்கம் போல்  விடுதலை , அயோத்தி நல்ல திரைப்படங்களைப் பார்த்து பாராட்டு தெரிவித்து இருக்கும்  ரஜினி அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

ப

 இது குறித்து தங்கள் மனம் போனில் விமர்சித்து வருகின்றனர்.  அப்படித்தான் எழுத்தாளர் பா.ராகவனும் விமர்சித்துள்ளார்.  அவர்,   ‘’தினத்தந்தியில் முன்னொரு காலத்தில் அதிவீர பாண்டியன் என்றொரு சினிமா நிருபர் இருந்தார். ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் ப்ரஸ் ஷோக்களில் அவர் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டுதான் படம் போடவே ஆரம்பிப்பார்கள்.  காப்பி டிபன் உள்ளிட்ட சகலமானதிலும் அவரைத் தனியே கவனிப்பார்கள். மற்றவர்களையெல்லாம் பி.ஆர்.ஓ பார்த்துக்கொள்வார் என்றால் அவரை மட்டும் தயாரிப்பாளரே வந்து உபசரிப்பார். படம் பார்த்த மறுநாள் அவரது விமரிசனம் வெளியாகும். உடனே அதிலிருந்து ஒரு வரி அல்லது இரண்டு வரிகளை எடுத்துப் போட்டு அடுத்த நாள் விளம்பரம் செய்வார்கள். அதிவீர பாண்டியன் இப்போது எங்கிருக்கிறார், எழுதுகிறாரா என்று தெரியவில்லை. இந்நாள்களில் அவரது பணியை ரஜினி சிறப்பாகச் செய்கிறார்’’என்கிறார்.