சளி சிகிச்சைக்காக சென்ற 12 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி! கடலூரில் பரபரப்பு

 
ஆண்களுக்கான கருத்தடை ஊசி தயார்…இந்திய மருத்துவ கவுன்சில் சாதனை!

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக சென்ற 12 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் அரசு மருத்துவமனைக்கு சாதனா என்ற 12 வயது சிறுமி தனது தந்தையுடன் சென்றுள்ளார். மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதனை செய்த போது சளி பிரச்சனை இருப்பதாக தந்தை கூறியுளார். இதனையடுத்து அந்த சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர் சளிக்கான ஊசி மற்றும் மருந்தக்கான சீட்டு எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் ஊசி போடும் இடத்திற்கு சென்ற நிலையில், அங்கிருந்த செவிலியர் ஒருவர் அந்த சிறுமி கொண்டு சென்ற சீட்டை கூட வாங்காமல் இரண்டு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து சிறுமியின் தந்தை ஏன் இரண்டு ஊசி போடுகிறீர்கள் என கேட்ட போது நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போட வேண்டும் என கூறியுள்ளார் அந்த செவிலியர். இதனால் அதிர்ச்சி அடந்த அந்த சிறுமியின் தந்தை சளி பிரச்சனைக்காக வந்த தனது மகளுக்கு எதற்கு நாய்கடி ஊசி போட்டீர்கள் என கேட்ட நிலையில், அந்த செவிலியர் மலுப்பலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.  சளி சிகிச்சைக்காக சென்ற 12 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.