16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

 
tn

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்குளில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இன்றும் , நாளையும்  வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். வருகிற 1 ஆம் தேதி வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்  என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

summer

இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.