“என் ஏரியாவுக்கு வந்து, என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” - அன்பில் மகேஸ் ஆவேசம்..

 
anbil magesh

 “என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், என் ஆசிரியரை அவமானப்படுத்தி பேசிய அந்நபரை சும்மா விடமாட்டோம்” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச்  வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு  மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  . 

“என் ஏரியாவுக்கு வந்து,  என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” - அன்பில் மகேஸ் ஆவேசம்.. 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்

அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக் கூடியது.  ஒவ்வொரு மாதமும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது

“என் ஏரியாவுக்கு வந்து,  என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்” - அன்பில் மகேஸ் ஆவேசம்.. 

என்னுடைய ஏரியாவுக்குள் வந்து, என்னுடைய ஆசிரியரை அவமானப்படுத்தி பேசியிருக்கும் அந்நபரை சும்மா விடமாட்டோம். தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி.  எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் என்பது இல்லை. புதிய கல்விக்கொள்கையை கூட நாங்கள் அதற்காக ஏற்கவில்லை. 

தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அபரை அழைத்து வந்ததில் பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு உள்ளது. இருப்பினும் அந்த தைரியத்தை அவர்களுக்கு வழங்கியது யார், அனுமதி கொடுத்தது யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று தெரிவித்தார்.