ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

 
bus ticket bus ticket

8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3274 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஏப்ரல் 21ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஓட்டுநர், நடத்துநர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதன்படி,  8 அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3274 டிசிசி (Driver cum Conductor) பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஏப்ரல் 21ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 364, விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 322, கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் 756, சேலம் போக்குவரத்து கழகத்தில் 486, கோவை போக்குவரத்து கழகத்தில் 344, மதுரை போக்குவரத்து கழகத்தில் 322, நெல்லை போக்குவரத்து கழகத்தில் 362 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 1.7.2025 படி 24 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வு அளிக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரிய வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாத அனுபவம்), நடத்துநர் உரிமம் போன்றவை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

chennai bus

உடல் தகுதிகளை பொறுத்த வரையில் 160 செ.மீ உயரம் மற்றும் 50 கிலோ எடை இருக்க வேண்டும். தெளிவான கண் பார்வை இருக்க வேண்டும். https://www.arasubus.tn.gov.in/  என்ற இணையதளம் முதல் நாளை முதல் ஏப்ரல் 21ம் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.