நீங்கள் நினைத்தால் இந்த 9 மாத பச்சிளம் குழந்தையை காப்பாற்றலாம்..!
தர்மபுரியை சேர்ந்தவர் ஹன்ஜனா., பிறந்தது முதல் உயிருக்கு ஆபத்தான இருதய நோயுடன் போராடி வருகிறார். குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்.
சமீபத்தில், MIOT மருத்துவமனைகளில் நடைபெற்ற இலவச இருதய பரிசோதனை முகாமில், ஹன்ஜனா ஸ்ரீ-க்கு நடத்தப்பட்ட சோதனையில், "வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட் (VSD), கடுமையான நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம், மற்றும் சிறிய பேடன்ட் ஃபோரமென் ஓவல் (PFO)" இருப்பது கண்டறியப்பட்டது.
MIOT மருத்துவர்கள், குழந்தைக்கு அறுவை சிகிச்சை (VSD & ASD மூடுதல்) செய்ய பரிந்துரைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை குழந்தையின் உயிரைக் காக்க மிகவும் அவசியம் என்றும், இதற்கு ₹3,00,000 செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் தந்தை, முரளிதரன், லாரி பழுதுபார்க்கும் பட்டறையில் தினக்கூலித் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். இவருடைய ஒரு நாள் வருமானம் ₹700 மட்டுமே. இந்த குறைவான வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதும், மூத்த குழந்தையின் கல்விச் செலவுகளை சமாளிப்பதும் இவருக்கு சவாலாக உள்ளது.
இவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்பாடு செய்வது இவருக்கு இயலாத காரியம். ஹன்ஜனா ஸ்ரீயின் பெற்றோர்கள், "எங்கள் குழந்தை இவ்வளவு சீக்கிரம் உயிருக்காகப் போராட நேரிடும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. அவளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமத்தைப் பார்க்கும்போது எங்கள் இதயம் உடைகிறது.
பெற்றோர்களாகிய நாங்கள், எங்கள் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியமாக வளர்ந்து, விளையாடி, பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று மட்டுமே கனவு காண்கிறோம். ஆனால் அறுவை சிகிச்சை நடத்தாமல், இது சாத்தியம் இல்லை. எங்கள் மகளைக் காப்பாற்ற உங்கள் அன்பான உதவியை பணிவுடன் வேண்டுகிறோம்," என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
உங்கள் தாராளமான பங்களிப்பு, சிறியதாக இருந்தாலும், குழந்தை ஹன்ஜனா ஸ்ரீக்கு வாழ்வுக்கான வாய்ப்பை வழங்க முடியும். இந்த முக்கிய அறுவை சிகிச்சைக்கு உதவுவதன் மூலம், அவளுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப்பருவத்திற்கான வாய்ப்பை வழங்கலாம். குழந்தை ஹன்ஜனா ஸ்ரீயின் சிறிய இதயத்தைக் காப்பாற்ற அனைவரும் முன்வருவோம்.


