‘கட்டாயம் கடைபிடிக்கனும்..’ 11 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!!

 
விபத்தில் சிக்கிய பலரும் வீடு போய் சேர்ந்தனர்- அஸ்வினி வைஷ்ணவ் விபத்தில் சிக்கிய பலரும் வீடு போய் சேர்ந்தனர்- அஸ்வினி வைஷ்ணவ்

ரயில்வே கேட்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 11 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.  

கடலூர் செம்மங்குப்பத்தில் அமைத்துள்ள ரயில்வே கிராசிங் கேட்டை கடக்க முயன்ற தனியா பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ரயில்வே கிராசிங் கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட அந்த ரயில்வே கேட்டில், இண்டர் லாக்கிங் வசதி இல்லை எனக்கூறப்படுகிறது. இதுவும் விபத்துக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவதால், ரயில்வே கேட்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இதனையடுத்து  அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 வழிகாட்டு நெறிமுறைகளை  ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதாவது, “

கடலூர் பள்ளி வேன் விபத்து -ரயில்வே கேட் கீப்பர் சஸ்பெண்ட்..

*அனைத்து ரயில்வே கேட்களில் , கேட் கீப்பர் அறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

*கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

*10,000 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்லும் ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும்.

*இண்டர் லாக்கிங்கிற்கு மாற்றப்படாத பகுதிகளில், ரயில்வே கேட்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

*இண்டர் லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்.

*பொதுமக்களே மூடி, திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும்.

*இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை கண்காணிக்கவும்.

*ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

* லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* ரயில்வே கேட்களில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் வழங்க வேண்டும்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.