தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த இளைஞர் கொலை- பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது

 
ச் ச்

சிவகாசியில் தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவது மகன் தமிழரசன் (வயது 26). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் ஊருக்கு அருகேயுள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5- பேர் கொண்ட கும்பல் தமிழரசனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த தமிழரசனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் பற்றி எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான சங்கர பாண்டியன் என்பவரது தங்கையை வாலிபர் தமிழரசன் காதலித்து வந்ததாகவும், தமிழரசனுக்கு அப்பெண் தங்கை உறவு முறை என்பதால் காதலை கைவிடுமாறு சங்கரபாண்டியனும், அவரது உறவினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனாலும் தமிழரசன் தனது காதலை கைவிட மறுத்ததால் சங்கரபாண்டியன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் சிலர் தமிழரசனுடன் மது அருந்தும் போது காதலை கைவிடுமாறு வலியுறுத்தியதாகவும், அதைக்கேட்க மறுத்து தமிழரசன் தகராறு செய்ததால் அவரைக் கொலை செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இந்நிலையில் தனிப்படை போலீசார் மேல்விசாரணை நடத்தி தங்கை உறவுமுறை கொண்ட பெண்ணை காதலித்த தமிழரசன்( வயது 26) என்ற வாலிபரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்த பெண்ணின் தந்தை சுரேஷ்( வயது 42 ) மகன் சங்கர பாண்டியன்( வயது 22 ), உறவினர்கள் மற்றும் நண்பர்க ளான ரஞ்சித்குமார் (வயது 24), முத்துப்பாண்டி( வயது 22 ) ஜெயசங்கர்( வயது 23 ), செல்வம்( வயது 26 ) மணிகண்டன்( வயது 21) ஆகிய 7 பேரை எம். புதுப்பட்டி போலீசார் மூலம்கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விருதுநகரி லுள்ள மாவட்ட சிறையிலடைத்தனர்.