மீண்டும் உயிரை குடிக்கும் ஆன்லைன் ரம்மி... ரூ.16 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை!

 
ஆன்லைன் ரம்மி

முந்தைய காலத்தில் நேரடியாக இருந்த சூதாட்ட விளையாட்டுக்கள் தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப டிஜிட்டலிலும் கோலோச்சுகின்றன. ஆன்லைன் ரம்மி, ட்ரிம் 11 என பல்வேறு சூதாட்ட விளையாட்டுகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பணம் மீது மோகம் கொண்டு ஏராளமானோர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் விரிக்கும் வலையில் வீழ்கின்றனர். ஆரம்பத்தில் பணத்தை அள்ளிக் கொடுப்பது போல் ஒரு மாயையை உருவாக்குகிறது. இதனை நம்பி மக்களும் கடன் வாங்கி முதலீடு செய்து சூதாடுகிறார்கள். ஆனால் கடைசியில் அந்நிறுவனங்கள் வேலையைக் காட்டி விடுகின்றன. தொடர் தோல்விகளைக் கொடுத்து உயிரையும் பறித்து விடுகின்றன.ஆன்லைன் ரம்மி

இந்த ஆன்லைன் விளையாட்டுக்களால் அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழ்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி மாநில அரசு  சட்டம் இயற்றியது. இதற்குப் பின் நிலைமை ஓரளவு சீரானது. ஆனால் இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியில் நிறுவனங்களுக்குச் சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் ஆன்லைட் சூதாட்ட விளையாட்டுகள் படையெடுத்தன.

ஆன்லைன் ரம்மி... ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை... | nakkheeran

விளைவு திருப்பத்தூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் பணியாற்றிய ஐடி ஊழியர். செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி அடிக்கடி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றதால் மேலும் மேலும் அது விரித்த வலையில் விழுந்து பணத்தைக் கொட்டியிருக்கிறார். இறுதியாக 10 லட்சம் ரூபாய் பறிபோனது தான் மிச்சம். ஆனால் இதோடு விட்டுவிடாமல் ஆனந்தன், 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி  விளையாடியுள்ளார்.  உள்ளாட்சித் தேர்தலுக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

suicide || கோவில் பூசாரி தற்கொலை

அவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடிய விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் ஆனந்தனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் செல்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் ஆனந்தனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.