சேலத்தில் கொரோனாவுக்கு இளைஞர் பலி

 
கொரோனா வைரஸ் எதிரொலி : சீனாவிலிருந்து வந்த 8 பேருக்குத் திருமணம், காது குத்துக்கு செல்ல தடை! கொரோனா வைரஸ் எதிரொலி : சீனாவிலிருந்து வந்த 8 பேருக்குத் திருமணம், காது குத்துக்கு செல்ல தடை!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார்.

corona patient

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 2,710 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1 உயிரிழப்பு பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இன்று மற்றொரு உயிரிழப்பாக 
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் உயிரிழப்புக்கு காரணம் என சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.