ரேபிஸ் பாதிப்பின் உச்சம்... டாக்டரை நாய் போல் விரட்டி விரட்டிய தாக்கிய இளைஞர் பலி
நெல்லையில் தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு வாலிபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் யாக்காபுரம் சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வேலைக்கு சென்ற இடத்தில் தெரு நாய் ஒன்று கடித்து இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் அதை சரியாக கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை அந்த வாலிபருக்கு மோசம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக சிகிச்சை பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரேபிஸ் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த 2 டாக்டர்களையும் அந்த வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேபிஸ் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் ஐய்யப்பன் பரிதாபமாக இறந்திருக்கிறார். இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


