சென்னையில் மாரத்தான் ஓடிய இளைஞர் பலி! மா.சு. தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் சோகம்

 
உதகையில் சி-விஜில் செயலி குறித்த விழிப்புணர்வு மாரத்தான்… ஆட்சியர் தொடங்கி வைத்தார்… உதகையில் சி-விஜில் செயலி குறித்த விழிப்புணர்வு மாரத்தான்… ஆட்சியர் தொடங்கி வைத்தார்…

அமைச்சர் துவங்கி வைத்த மாரத்தானில் ஓடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Death
 

புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அதிகாலை சைக்கிள் மற்றும் ஓட்டம் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.  இந்த மாரத்தான் நிகழ்வில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஆன பரமேஷ்(24) என்ற இளைஞர் பங்கேற்றார். பின்னர் பரமேஷ் காலை 7.15 மணியளவில் இன்டர்நேஷனல் ஹாஸ்டல் ரோடு சூர்யா நகர் ஜங்ஷன் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். 

உடனடியாக அருகில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். இறந்த இளைஞரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.