ஆன்லைன் ரம்மி விளையாடியதால் பறிபோன இளைஞர் உயிர்!
ஆண்டிமடம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் பிரேமதாஸ் (21) டிப்ளமோ படித்துள்ளார், இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் வீட்டில் இருந்த புல்லுக்கு அடிக்கும் கலைக்கொல்லி மருந்தை எடுத்துக் கொண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான்சாவடி கிராமம் அருகே சேனா பள்ளம் செல்லும் பகுதியில் வைத்து களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு கீழே கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரேமதாஸ் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பிரேமதாஸ் தந்தை மாரியப்பன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பிரேமதாஸ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது