ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை

 
Suicide

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த கேரளாவை சேர்ந்த இளைஞர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

கேரளாவை சேர்ந்தவர் ரியாஸ்கான். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ரியாஸ்கான் அண்மை காலமாக ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இவர், கடும் மன உளைச்சளில் இருந்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற ரியாஸ்கான், திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், 2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு ரியாஸ்கானின் உடலை மீட்டனர். 
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.


தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த 40 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.