பேருந்து நிற்காத இடத்தில் நிற்கச் சொல்லி பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்

 
ச் ச்

திருத்தணியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற தனியார் பயணிகள் பேருந்து மது போதையில் சாலை நடுவே நிற்க வைத்து ரகளையில் ஈடுபட்டு ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கார்வேட் நகரம் ஆந்திராவிற்கு சென்ற தனியார் பயணிகள் பேருந்தை திருத்தணி பைபாஸ் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை பேருந்து முன்பு நிறுத்தி வைத்து மது போதையில் வந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் பேசிய  மது போதை இளைஞர்கள் 40 நிமிடம் சாலை நடுவே மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருப்பதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சித்தூர், ஆகிய வழியாக செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் சாலை நடுவே நின்றதால் 40 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும்  பேருந்து ஓட்டுனரை எச்சரிக்கை செய்துவிட்டு மது போதை இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார் சினிமா பாணியில் துரத்தி சென்று மது போதை இளைஞர்களை பிடித்தனர். தகராறில் ஈடுபட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது