‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது!

 
‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது! ‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது!


‘பிரியாணி மேன்’என்று அழைக்கப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் ரபீயை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 


பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் தனது யூடியூப் சேனலில் சுமார் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருக்கிறார். இவர் தனது சேனலில் நேற்று முன்தினம் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே துணியால் தற்கொலை முயன்றார்.  இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தியது போன்றவற்றை சுமார் 3 மணி நேரம் வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.  இந்த சம்பவத்தையடுத்து யூடியூப் நேரலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அபிஷேக் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்து வந்தனர்.  

‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது!

அதுமட்டுமின்றி கடந்த ஒரு வாரமாகவே உணவு ரிவ்யூ செய்யும் யூடியூப் சேனல் நடத்தி வரும் இர்ஃபான், டெய்லர் அக்கா உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் எளிதில் பிரபலமடைய வேண்டும் எனபதற்காக பிரபலமான யூடியூபர்களை அவதூறாக விமர்சித்து வருகிறார் என இர்ஃபான் தரப்பு ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருவரது ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டும் இருக்கின்றனர்.   

அதேபோல் டெய்லர் அக்கா யூடியூபரையும் அவதூறாக விமர்சனம் செய்து வந்ததால் பிரியாணி மேனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தது.  இதன் காரணமாகவே அவர் நேரலையில் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரங்கிமலை சைபர் கிரைம் போலீசார்பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது செய்துள்ளனர்.  மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.