இத்தனை நாளா ஏமாத்திருக்கீங்க..! சென்னை ஏர்டெல் ஷோரூம் முன்பு வாடிக்கையாளர் தர்ணா..!
ஏர்டெல் ஷோரூம் முன் அமர்ந்து ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
போராட்டம் நடத்திய கே.பி. சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,"நான் கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் நிறுவனத்தில் மாதந்தோறும் ₹1,199 செலுத்தி DTH மற்றும் இன்டர்நெட் இணைப்பை வாங்கினேன். இணைப்பை வாங்கும் போது, எனக்கு 100 Mbps வேகம் கிடைக்கும் என்று உறுதியளித்தார்கள். ஆனால், உண்மையில் எனக்கு அதிகபட்சமாக 40 Mbps வேகம் மட்டுமே கிடைக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் புகார் அளித்தும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என்றும், சரியான பதிலை அளிப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "நான் எனக்காக மட்டும் இங்கே வரவில்லை. என்னைப் போல ஏமாற்றப்படும் மொத்த மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் வந்திருக்கிறேன். ஒருவருக்கு மாதம் ₹400 வீதம் என்னைப் போல பலரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஷோரூமில் கேட்டால், 'தொழில்நுட்ப வல்லுநர் வருவார், வருவார்' என்றுதான் சொல்கிறார்கள். ஏன் 100 Mbps வேகம் வரவில்லை என்று கேட்டால், 'அந்த டவரில் 40 Mbps வரைதான் உச்ச வரம்பு (Limit)' என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இது ஒரு மறைமுகமான ஏமாற்று வேலை என்று கண்டித்துள்ள அந்த நுகர்வோர், தனது புகாரை முன்வைத்தார். "சரியான வேகத்தை உறுதி செய்யாமல் 100 Mbps-க்கான கட்டணத்தை வசூலிப்பது சரியல்ல. எனக்கு ஏற்பட்ட சேவை குறைபாட்டிற்கும், மன உளைச்சலுக்கும் நிறுவனம் உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்டர்நெட் கனெக்ஷன் வராததால் ஷோரூம் முன் அமர்ந்து தர்ணா..!
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) December 12, 2025
செலுத்திய பணத்திற்கு இன்டர்நெட் கனெக்ஷன் வராததால் மனமுடைந்த வாடிக்கையாளர் தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏர்டெல் ஷோரூம் நுழைவாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில்… pic.twitter.com/pQNWbhTc0r


