• July
    16
    Tuesday

Main Area

Main



தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கும் அந்த வீடியோக்கள்; இன்று ரிலீசாகுமா?

கோப்புப்படம்
கோப்புப்படம்
Loading...

சென்னை: மக்களவை தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோக்கள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறுகிறது.

amit shah

தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளையுடன் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நிறைவடைகிறது.

modi, stalin

இந்நிலையில், தேர்தலில் அதிரடி திருப்பங்களை உண்டாக்கவிருப்பதாக கூறப்படும் வீடியோக்கள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவலின் படி, தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க திமுக உதவும் என பாஜக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இருவரிடம், திமுக பிரமுகர்கள் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியானால், திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ttv dhinakaran

மற்றொரு வீடியோவானது, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலர் செய்த ஊழல் குறித்தும், தன்னிடம் தூது பேசிய அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் குறித்தும் டிடிவி தினகரன் வெளியிடவுள்ளது. இந்த வீடியோ வெளியானால், அதிமுக-வுக்கு தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

rahul gandhi

அதேபோல், மற்றொரு வீடியோவானது தில்லியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அதில், முறைகேடாக  பணம் வந்த ஏதோ விவகாரம் தொடர்பாக பாஜக முக்கிய பிரமுகர்கள் சிலர் பேசுவது போன்ற காட்சியை காங்கிரஸ் வெளியிடும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியானால், அது தேசிய அளவில் பாஜக-வுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதையும் வாசிங்க

திருடன் மோடி; ராகுல் காந்தி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018 TopTamilNews. All rights reserved.