• July
    21
    Sunday

Main Area

Main



பேக்கேஜ் டூர் போகும் முன்பு கவனிக்க வேண்டியவை?

package tour
package tour
Loading...

முன்பெல்லாம் டூர் போக வேண்டுமென்றால் எந்தெந்த இடங்களெல்லாம் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று புரியாமல் ஹோட்டல் ஊழியர் முதல், ஆட்டோ டிரைவர் வரை விசாரித்து, உணவு விடுதிகளைத் தேடிப் பிடித்து டூர் முடித்து வீடு திரும்புவதற்கு போதும் போதும் என்றாகிவிடும்.

ஆனால் இதற்கு தீர்வு காணும் விதமாக வந்துள்ளது, 'பேக்கேஜ் டூர். முன்கூட்டியே கட்டணத்தைக் கட்டிவிட்டால் போதும், வீட்டிலிருந்து கிளம்புவது முதல், வீடு வந்து சேர்வது வரை ஹோட்டல், உணவு, பார்க்க வேண்டிய இடங்கள் என்று எல்லாம் அவர்கள் பொறுப்பு.

package tour 1

எனினும் இந்த பேக்கேஜ் டூர்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே, பேக்கேஜ் டூர் போகும் முன்பு சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

**முதலில், ஏஜென்ஸியைப் பற்றி நன்கு விசாரியுங்கள். புது ஏஜன்ஸியாக இல்லாமல், பல ஆண்டுகள் அனுபவமிக்கவர்களாக இருக்க வேண்டும்.

**ஏஜென்ஸி சொல்லும் வார்த்தைகள், அது காட்டும் கையேடுகளில் மயங்காமல், அதுகுறித்து கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

**சொகுசு ஹோட்டல் அறைகள், விதவிதமான உணவு வகைகள், கேளிக்கைகள் என்று அவர்கள் காட்டும் கையேடுகளில் உள்ள படங்களைப் பார்த்து ஏமாறாதீர்கள். நீங்கள் தங்குவதற்காக அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஹோட்டலை, இன்டர்நெட் மூலமாக கண்டறிந்து கொள்ளுங்கள்.

tour

**பயணம், தங்குமிடம் போன்றவற்றில் ஏதாவது அவசர, ஆபத்து நேர்ந்தால், அதற்கான அவர்களின் மாற்று ஏற்பாடு, முதலுதவி நடவடிக்கைகள் என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

**பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகள், பெரியவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிய வேண்டும்.

**நீங்கள் செல்லவிருக்கும் ஏஜென்ஸி மூலமாக ஏற்கெனவே சுற்றுலா சென்று வந்தவர்கள் யாராவது கிடைத்தால் அவர்களுடைய அனுபவத்தையும் கேட்டுக்கொள்ளுங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.