• July
    22
    Monday

Main Area

Main



திருப்பதியில பாலாஜியை தவிர்த்து அத்தனைபேரையும் தூக்கு - ஜெகன் உத்தரவு

Jagan at Tirupati
Jagan at Tirupati
Loading...

ஆட்சி மாற்றம் கண்டால், காட்சிகள் மாறுவதுதானே இயல்பு. இந்த வெற்றி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமாங்கிற அளவுக்கு அதிரிபுதிரி வெற்றிகண்டு முதல்வராகி இருக்கிறார் ஜெகன் மோகன். முந்தைய சந்திரபாபு ஆட்சியில் ஒன்றியம் முதல் வாரியம் வரை அத்தனை பேரையும் தூக்கி கடாசும் ஜெகனின் கண் திருப்பதி தேவஸ்தானத்தின்மீதும் பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து சுதா மூர்த்தி கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

Sudhakar Yadav

பரவால்லயே, தேவஸ்தான உறுப்பினரை மட்டும்தான் தூக்கியிருக்காங்க, நம்மளை இல்ல என தேவஸ்தான போர்ட் தலைவர் புட்டா சுதாகர் கடந்த வாரம்வரை நினைத்து இருந்தார். இன்று அவரது பதவிக்கும் கோவிந்தம் பாடப்பட்டுவிட்டது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும், உடனடியாக தனது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளும்படியும் கடிதம் அனுப்பிவிட்டார். ரொம்ப நாளா எனக்கு என்ன சந்தேகம்னா, இந்த ஆட்சி மாறின உடனே பதவி விலகுறவங்க எல்லாம் சொந்த காரணம்னு சொல்றாங்களே, அப்படி என்ன காரணமா இருக்க முடியும்?

2018 TopTamilNews. All rights reserved.