Main Area

Main

திருவண்ணாமலையில் மூன்று தேவிகளின் வடிவமான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

thiruvannamalai

கிருதாயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் முக்கண்ணன் தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. 

annamalai

தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின்  அந்த பிரகாசத்தினை வழிபடும்  விதத்தில் தான் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகின்றது என்கிறது பண்டைய நூல்கள்.

தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாக கலந்த ஒன்றாகும். எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி  எய்தும் என்பது ஆன்றோர் மொழி. 

annamalaihj

எனவே கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி  வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

ஒவ்வொரு வருடமும் திரு கார்த்திகை தீப திருவிழா கார்த்திகை மாதம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டிற்கான திரு கார்த்திகை தீப திருவிழா வருகின்ற நவம்பர் மாதம் 23 ஆம் தேதி தமிழகம் எங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.

 ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது  நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர  வேண்டிய அகத்தோற்றமாகும்.  

anna

வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

திருவிளக்கால் அறியத்தக்க  மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.

கார்த்திகை தீப விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும். மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும். கார்த்திகை அன்று  பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.

கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா விளக்குகளையும் ஏற்ற  வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகும்.

sivaghj

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது. மிகப்பெரிய  கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும்.

கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாகத் தெரிகின்றது. 

2018 TopTamilNews. All rights reserved.