• January
    21
    Monday

Main Area

Main

கோடநாடு மர்மத்தில் எடப்பாடிக்கு தொடர்பா? என்ன சொல்கிறார் முதல்வர் பழனிசாமி!

edappadi
Loading...

சென்னை: கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளியான வீடியோ குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நேற்றைய தினம் தெஹல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கோடநாடு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்கள். கோடநாடு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள் மீதும், அதற்குப் பின்புலத்தில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நேற்றே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறான செய்தி வெளியிட்டவர்கள் மற்றும் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவார்கள்.

kodanadu

ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளிடம் சில ஆவணங்களை வாங்கி கோடநாட்டில் வைத்திருந்ததாகவும், அதை கொள்ளை அடிக்கவே சிலர் சென்றதாகவும் கூறியிருக்கிறார்கள். ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடமும் எந்த ஒரு ஆவணத்தையும் எப்போதும் பெற்றதில்லை. ஜெயலலிதா மீது களங்கம் கற்பிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர். இதில் அரசியல் பின்புலம் உள்ளது.

கொடநாடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததற்கு காரணம் திமுக தான். உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்த போது கிராமங்களுக்கு செல்லாதது ஏன் மக்களின் அடிப்படை வசதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திமுகவின் கிராம சபை கூட்டம் ஒரு அரசியல் நாடகம். ஸ்டாலினால் குறுக்கு வழியில் அரசை கவிழ்க்க முடியாது' என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.