விஷால் இசையில் 'வானம் யாவும்'... நயன்தாராவின் 'O2' பாடல் வெளியீடு !

 
விஷால் இசையில் 'வானம் யாவும்'... நயன்தாராவின் 'O2' பாடல் வெளியீடு !

நயன்தாராவின் ‘O2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஜி எஸ் விக்னேஷ் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'O2'. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். அதாவது அரிய வகை நுழையீரல் பிரச்சனையால் அவதிப்படும் 10 வயது மகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 

விஷால் இசையில் 'வானம் யாவும்'... நயன்தாராவின் 'O2' பாடல் வெளியீடு !

நயன்தாராவின் மகன் கதாபாத்திரத்தில்  யூடியூப் பிரபலம் சிறுவன் ரித்விக்கும் நடித்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக 'கே 13' படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, ஆர்என்ஆர் மனோகரன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது.

விஷால் இசையில் 'வானம் யாவும்'... நயன்தாராவின் 'O2' பாடல் வெளியீடு !

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவான முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. வானம் யாவும் என தொடங்கும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.