‘புதுபுது அர்த்தங்கள்’ சீரியலில் நடிக்கும் ஆர்ஜே பாலாஜி.. ப்ரோமோ வெளியீடு !
தேவயானி நடிக்கும் ‘புதுபுது அர்த்தங்கள்’ சீரியலில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ‘புதுபுது அர்த்தங்கள்’. பிரபல நடிகை தேவயானி, இந்த சீரியலில் லட்சுமி அம்மா என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தேவயானி நடிப்பு இல்லத்தரசிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. அதனால் இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருக்கிறது.

பொதுவாக சீரியலை சுவாரஸ்சியமாக்க சினிமாவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை வனிதா இந்த சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் இந்த சீரியலில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட ‘வீட்ல விசேஷம்’ குழுவினர் தங்களின் படத்தின் ப்ரோமோஷனுக்காக சீரியலில் நடித்துள்ளனர்.

தற்போது அவர்கள் நடித்துள்ள சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளளது. அதில் தேவயானியுடன் பேசும் ஆர்ஜே பாலாஜி, எங்க வீட்டுல ஒரு குட்டி பாப்பா வரப்போகுது என்று பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கலகலப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த சீரியல் ப்ரோமோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
Veetla Vishesham in Puthu Puthu Arthangal 😀
— Zee Tamil (@ZeeTamil) June 14, 2022
புதுப்புது அர்த்தங்கள் | வீட்டுல விஷேசம் Special | திங்கள் - சனி, இரவு 8.30 மணிக்கு#PuthuPuthuArthangal #VeetlaVishesham @RJ_Balaji @Aparnabala2 #Devayanirajakumaran #ZeeTamil @ZeeStudios_ pic.twitter.com/Bomh8BdyVW


