கேரளாவில் மறுவீடு... கொச்சினின் பிரபல கோவிலில் தரிசனம் செய்த விக்கி- நயன் ஜோடி!
புதுமண ஜோடிகளான நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கேரளா கொச்சினில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
தென்னிந்தியாவின் பிரபல காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 'நானும் ரவுடி தான்’ படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி சமீபத்தில் திருமணம்முடித்துள்ளனர்.
பல திரைத்துறை நட்சத்திரங்கள் கலந்துகொள்ள இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக இருவரது திருமணம் தான் சென்ஸேஷன் டாபிக் ஆக இருந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். அடிக்கடி பிரபல கோவில்களுக்கு விசிட் அடித்து வருகின்றனர். திருமணம் முடிந்த மறுநாள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது கேரளாவிற்கு மறுவீடு சென்றுள்ள ஜோடி, கொச்சினில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


