'சுழல்' சீரிஸின் கலாட்டாவான படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டி!
சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கையான படப்பிடிப்பு தள புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா ரெட்டி பகிர்ந்துள்ளார்.
பிரைம் வீடியோவின் முதல் முழு நீள தமிழ் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வோர்டெக்ஸ் தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரம்மா மற்றும் அனுசரண்.M இயக்கத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் எழுத்து மற்றும் தயாரிப்பில் இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷ்ரேயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவினர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் போது, கண்டுபிடிக்கபடும் ஆச்சர்யம் நிறைந்த நிகழ்வுகளை தொகுத்து 8 எபிசோடாக உருவாக்கியுள்ளனர் படகுழுவினர். பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தொடரான,
சுழல் - தி வோர்டெக்ஸ் என்ற தமிழ் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஜூன் 17 முதல் ஒளிபரப்பாகிறது.

தற்போது நடிகை ஸ்ரேயா ரெட்டி படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளார். முன்னணி நடிகை ஷ்ரேயா ரெட்டி, தீவிர படப்பிடிப்பின் போது, திரையில் போலீஸ் உடை அணிந்து, திரைக்குப் பின்னால் அவர் செய்த வேடிக்கையான விஷயங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், ஸ்ரேயா, ரெஜினா என்ற போலீஸ்காரராக காணப்படுகிறார். ஊட்டி நகரத்தில் 'தி சுழல் கர்ஜனை' தீம் டிராக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அவர் செய்த உடல் பயிற்சியை வீடியோவில் காணலாம்.

“ஒரு தீவிரமான காட்சியை படமாக்கும் போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை., காபி இல்லை, டீ இல்லை, இசை கூட எனக்கு உதவவில்லை. அதனால் குளிர் தாக்கும் ஊட்டியில் மீண்டும் என் கதாபாத்திரத்திற்குள்ளேயே செல்ல நான் முடிவு செய்தேன். இதுதான் ஒரே வழி என்று எனக்கு தோன்றியது." என்றும் தெரிவித்துள்ளார்.


