ஹாரரில் மிரட்டப்போகும் அஸ்வினின் ‘பீட்சா 3’... ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு !
அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீட்சா 3’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படம் ‘பீட்சா’. விஜய் சேதுபதி சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்களை பாராட்டை பெற்றது. இந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் உருவாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ளார். ‘பீட்சா 3’ தி மம்மி என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வரும் ஜூன் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


