'சர்தார்' படத்தின் வில்லன் காட்சிக்கு மட்டும் பல கோடி செலவு... ஏன் தெரியுமா!?

 
'சர்தார்' படத்தின் வில்லன் காட்சிக்கு மட்டும் பல கோடி செலவு... ஏன் தெரியுமா!? 'சர்தார்' படத்தின் வில்லன் காட்சிக்கு மட்டும் பல கோடி செலவு... ஏன் தெரியுமா!?

 'சர்தார்' படத்தில் வில்லன் நடிக்கும் காட்சிக்காக 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

'இரும்புத்திரை' பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார். கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்கிறார்.  

சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

'சர்தார்' படத்தின் வில்லன் காட்சிக்கு மட்டும் பல கோடி செலவு... ஏன் தெரியுமா!?

தற்போது இந்தப் படத்தின் வில்லன் காட்சிக்காக மட்டும் ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.


இது வரை எந்த படப்பிடிப்பும் நடத்தப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியாவிலும்  படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப்பட்தாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.