கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’.. ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு !

கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’.. ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு !

 விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் ‘வள்ளி மயில்’.  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்து வரும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 

கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில்’.. ஃப்ர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு !

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். சத்யராஜ், பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.