• May
    26
    Sunday

Main Area

Main



நெருங்கும் மக்களவை தேர்தல்: சசிகலாவுடன் டி.டி.வி திடீர் சந்திப்பு!

சசிகலா-   டிடிவி தினகரன்
சசிகலா-   டிடிவி தினகரன்
Loading...

பெங்களூரு: மக்களவை தேர்தலை  முன்னிட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை  டி.டி.வி தினகரன் சந்தித்து பேசினார். 

மக்களவை தேர்தல்:

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம்  சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் தலைமையின் கீழ் தமிழக கட்சிகள் சில கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி  தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தேர்தல் குறித்து சந்தித்துப் பேசினார். அவருடன் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, இளவரசியின் மகன் விவேக், நடராஜனின் சகோதரர் ராமசந்திரன் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனர்.

சசிகலாவின் வழிகாட்டுதல்கள்:

இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், 'மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலை எங்களது கட்சி சார்பில் எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனை நடத்தினேன். தொகுதிவாரியாக யாரை வேட்பாளராகத் தேர்வு செய்வது, தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது குறித்து பேசினோம். அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா சில வழிகாட்டுதல்களை வழங்கினார்' என்றார்.

பொள்ளாச்சி ஜெயராமனின் பேச்சில் சந்தேகம் உள்ளது:

தொடர்ந்து பேசிய அவர், 'பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மாவட்ட காவல் அதிகாரி முடிவை அறிவித்துள்ளார்.  பொள்ளாச்சி ஜெயராமனின் பேச்சும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' என்று குறிப்பிட்டார்.

2018 TopTamilNews. All rights reserved.