• July
    21
    Sunday

Main Area

Main



எங்கள் குக்கர் எங்களுக்கு; பரிசுப் பெட்டி கிடைத்தும் குக்கரை மறக்க முடியவில்லை?!

அமமுக குக்கர்
அமமுக குக்கர்
Loading...

சின்னம் என்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் சின்னத்தை முக்கியமான அம்சமாக கருதுகிறது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பிரச்சார வேலைகளில் பிஸியாக உள்ளது.

புதிதாய் துவங்கப்பட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை விசிக, அமமுக உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளுக்கு கடந்த முறை கிடைத்த சின்னம் கிடைக்கவில்லை.

விசிக தனது வெற்றி சின்னமான மோதிரம் கேட்டது, கிடைத்தது என்னவோ பானை சின்னம்தான். எனினும் விசிக தலைவர் திருமாவளவன் அதனை ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். ஆனால் டிடிவி தினகரன் தனது அமமுக சின்னத்துக்காக பெரிய போராட்டத்தையே நிகழ்த்தி அதில் தோல்வியை சந்தித்திருக்கிறார்.

டிடிவி

தினகரன் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தின் மீது வழக்கு போட்டிருந்தார், அந்த வழக்கு முடியும்வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் பயன்படுத்திய குக்கர் சின்னத்தை யாருக்கும் வழங்காமல் நிறுத்திவைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் தினகரனுக்கு இரட்டை இலை கிடைக்கவில்லை. குக்கர் சின்னமும் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

தினா

அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் கேட்ட சின்னத்தை வழங்க இயலாது என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அமமுகவுக்கு பொது சின்னம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி அமமுகவுக்கு பரிசுப் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குக்கர் சின்னத்தை பொதுப்பட்டியலில் இருந்து நீக்கி எந்த சுயேச்சை வேட்பாளருக்கும் அந்த சின்னத்தை வழங்கக்கூடாது என்று அமமுக செய்தித்தொடர்பாளர்  முஸ்தபா தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.

டிடி

குக்கர் சின்னம் அமமுகவுக்கு செண்டிமென்டான சின்னமாகிவிட்டது. அதிமுகவை விட்டு பிரிந்து வந்த தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டுதான் மாபெரும் வெற்றி கண்டார். அதனால் பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்த பின்பும் தங்கள் செண்டிமென்ட் சின்னமான குக்கரை யாருக்கும் கொடுக்கக் கூடாது என மனு அளித்திருக்கின்றனர்.

ஆனால் தேர்தல் ஆணையம் இதிலும் டிடிவி தரப்பை வஞ்சித்துவிட்டது. திருச்சி, மதுரை தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள்  கணேசன், பசும்பொன் ஆகியோருக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிராக தினகரன் தரப்பு போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதையும் வாசிங்க

நிர்மலா தேவியின் வழக்கறிஞருக்கு ‘குக்கர்’ சின்னம்: அதிருப்தியில் தினகரன்; பழிவாங்கல் படலமா?

2018 TopTamilNews. All rights reserved.