• July
    17
    Wednesday

Main Area

Main



டிடிவி த மாஸ் முதல் டி டி வி தமாசு வரை

TTV Gift Box
TTV Gift Box
Loading...

அம்மாவையே கைக்குள் வைத்திருந்த மன்னார்குடி வகையறாக்களுக்கு எடப்பாடி எல்லாம் எம்மாத்திரம்? இரண்டு தேர்தலை தொடர்ச்சியா எடப்பாடியால தாக்குப்பிடிக்க முடியுமா? போகுற இடங்களில் எல்லாம் தினகரனுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்தீர்களா? காசு குடுத்து எத்தனை தடவை கூட்டம் கூட்ட முடியும்? தினகரன் தி மாஸ் மூணு ஃபயர் என்றெல்லாம் சமூக வலைதளங்களிலும், அரசியல் பார்வையாளர்கள் சிலராலும் தொடர்ச்சியாக மெச்சப்பட்டுக்கொன்டே இருந்தவர் டி.டி.வி. தினகரன்.

ரைட். தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன? எதிர்க்கட்சியான திமுகவுக்கோ, எதிரிகட்சியான அதிமுகவுக்கோ தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தால் எந்த‌ பாதிப்பையும் உண்டாக்க முடியவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்துவந்த 18 எம்.எல்.ஏக்களின் பதவியை தக்கவைக்க முடியவில்லை, அவர்களை திரும்பவும் வெற்றிபெற வைக்க முடியவில்லை, குறைந்தபட்சம் இரண்டாம் இடத்திற்குகூட வர முடியவில்லை என்பதை எல்லாம் தாண்டி, போட்டியிட்ட எந்த இடத்திலும் டெப்பாசிட்கூட வாங்க முடியவில்லை.

TTV

திமுகவை சமாளித்து ஆட்சியை தக்கவைக்க வேண்டும், தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை தொண்டர்களுக்கு உணர்த்த அமமுகவையும் வென்றாகவேண்டும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமியின் ஒருங்கிணைப்பில் கட்சி தங்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என பலகட்ட அக்னி பரீட்சையில் அதிமுக அசால்ட்டாக வென்றிருக்கிறது. தேர்தலில் முறைகேடு என ஓரிரு இடங்களில் நம்பத்தகுந்த கேள்விகளை அமமுக எழுப்பினாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால், அமமுகவின் மாபெரும் வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

TTV Gift Box

தேர்தல் தோல்வியை ஏற்றுகொள்வதாக தினகரன் ட்வீட் பதிவு செய்திருந்தாலும், பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுந்துவருவதாக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அதிமுக கைவிட்டுப் போனபின்பு, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் மட்டும் நம்பமுடியாத வெற்றியை பெற்ற தினகரனால், தன்னை நம்பிவந்த மற்றவர்களின் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை என்பது நிதர்சனமான உண்மை.அதேநேரம், தலைக்கு மேல் கத்தியாக தொங்கும் வழக்கு மற்றும் தொடர் தோல்வி இவற்றின்மூலம், தினகரனின் அரசியல் எதிர்காலமும் பலத்த அடிவாங்கியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.