• February
    18
    Monday

Main Area

Main

தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழர்கள்

delhihotelfire
delhihotelfire
Loading...

புதுதில்லி: தில்லியில் உள்ள தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருவர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.

தில்லி கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. 4 அடுக்குகளையும், 40-க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்ட இந்த ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவத்தின் போது அந்த ஹோட்டலில் சுமார் 60 பேருக்கும் அதிகமாக தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேரில் இருவர் தமிழர்கள் எனவும், அவர்கள் கோவையை சேர்ந்த அரவிந்த் மற்றும் நந்தா என்பதும் தெரியவந்துள்ளது. தொழில் ரீதியாக தில்லி சென்ற அவர்கள் கரோல்பாக்கில் உள்ள அர்பித் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர் என தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.