• July
    19
    Friday

Main Area

Main



தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்...இனி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவார் உதயநிதி ஸ்டாலின்...

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Loading...

எல்லாவிதமான பல்டிகளை அடித்துப்பார்த்தும் தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதால் ஃபுல் டைம் அரசியல்வாதியாக மாற நான்காம் கலைஞரான உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது. இதை ஒட்டி,42 வயதே ஆன இந்த குட்டி இளைஞருக்கு திமுகவில் இளைஞரணித் தலைவர் மகுடம் மிக விரைவில் சூட்டப்படவிருக்கிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே என்று சுமார் 10 படங்களில் நடித்தார்.அதில் முதல் படமான கல் கண்ணாடி தவிர எல்லாம் சுமார், சூப்பர், தயாரிப்பாளர் பாப்பர் ஆன ஃப்ளாப் படங்கள்.  தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

udhay

இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இவரது பிரசாரம் சாதாரண மக்களை கவரும் வகையில் இருந்ததாக ஸ்டாலின் குடும்ப வட்டாரத்தில் மட்டும் நம்பப்படுகிறது.இந்த நம்பிக்கையை உள்வாங்கி உதய நிதியின் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக தி.மு.க. மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் கட்சியின் முக்கிய பதவியான இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.கட்சிக்காரர்கள் வற்புறுத்தும்போது பாவம் ஸ்டாலின் அதைத் தட்டமுடியுமா?

இந்த நிலையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் தற்செய்லாக தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். இதை ஏற்றுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உதயநிதி இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 3 படங்களைத் தாண்டி இனி உதயநிதி படங்களில் நடிக்கமாட்டார். அவருடைய நடிப்பு அரசியலில் மட்டுமே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.