Main Area

Main

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி பெரும்பான்மை; அட்டர்னி ஜெனரல் ராஜினாமா

uselections

வாஷிங்டன்: அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. 

அமெரிக்க நாடாளுமன்றத்தின்  செனட் எனப்படும் மேலவை, பிரதிநிதிகள் சபை எனப்படும் கீழவைக்கான இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இரு அவைகளிலும் அதிக அதிகாரம் கொண்ட அவையான செனட் சபையில் ஆளுங்கட்சியான அதிபர் டிரம்ப் சார்ந்திருக்கும் குடியரசு கட்சி பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது. தற்போதைய நிலவரப்படி, செனட் சபையின் மொத்த உறுப்பினர்களில் ஆளும் குடியரசுக் கட்சியின் பலம் 51 ஆகவும், ஜனநாயகக் கட்சியின் பலம் 44 ஆகவும் உள்ளது மற்றவர்கள் 2 இடங்களை பெற்றுள்ளனர்.

ஆனால், பிரதிநிதிகள் சபை எனப்படும் கீழவை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது. இங்கு ஜனநாயக கட்சி உறுபினர்களின் பலம் 223 ஆகவும், குடியரசுக் கட்சியின் பலம் 197 ஆகவும் உள்ளது. இது அதிபர் டிரம்ப்பின் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதிக அதிகாரம் கொண்டது செனட் சபை தான் என்றாலும், டிரம்ப் ஆட்சியின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கீழவையால் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்பன உள்ளிட்டவைகளால், கீழவையில் ஆளும் கட்சி பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

இதனிடையே, அதிபர் டிரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசு நிர்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில், அந்நாட்டு அட்டர்னி ஜெரனல் எனப்படும் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டிரம்ப்பின் கோரிக்கை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.