• June
    20
    Thursday

Main Area

Main



பா.ம.க - வி.சி.க நேரடி மோதல்: ராஜதந்திர அடிப்படையில் உதயசூரியனில் வி.சி.க போட்டி!

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்
Loading...

சென்னை: விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைக் கட்சி  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

சிதம்பரத்தில் போட்டியிடும் திருமா :
thiruma ttn

மக்களவை தேர்தலுக்காக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட உள்ளது. விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை  விடுதலை சிறுத்தைக் கட்சி  தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார்.  அப்போது பேசிய அவர் சிதம்பரம் தொகுதியில் வி.சி.க சார்பில் தனிச்சின்னத்தில் தானே போட்டியிட போவதாக அறிவித்தார். விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர்  ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். 

ராஜதந்திர அடிப்படையில் உதயசூரியனில் வி.சி.க போட்டி
dmk symbol

தொடர்ந்து பேசிய அவர், 'வி.சி.க-விற்கு 2 தொகுதிகள் வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி; உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என தி.மு.க நிர்ப்பந்திக்கவில்லை. விழுப்புரம் தொகுதியை இழந்துவிடக்கூடாது என்பதால் ராஜதந்திர அடிப்படையில் உதயசூரியனில் வி.சி.க போட்டியிட உள்ளது.  வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியைச் சின்னம் நிர்ணயிப்பது இல்லை.ஆனால் வி.சி.க-வுக்கு தனி சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்கிறது. மீண்டும் மோடி வேண்டாம் என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுவோம்' என்றார்.

எதிர் எதிர் துருவங்களாக நிற்கும் பா.ம.க- வி.சி.க
thiruma ttn

மக்களவை தேர்தலில் கருத்து வேறுபாடுகளில் எதிர் எதிர் துருவங்களாக நிற்கும் பா.ம.க- வி.சி.க ஆகிய கட்சிகள், விழுப்புரம் தொகுதியில் நேரடியாகக் களம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.