• July
    17
    Wednesday

Main Area

Main



தி.மு.க கூட்டணியினர் வீட்டில் பணத்தை வைக்கிறதும் போட்டுக்கொடுக்கிறதும் அ.தி.மு.க-தான்! வேல்முருகன் பகீர் குற்றச்சாட்டு!?

வேல்முருகன் (கோப்புப்படம்)
வேல்முருகன் (கோப்புப்படம்)
Loading...

சென்னை: தி.மு.க கூட்டணியினர் வீட்டில் பணத்தை வைப்பதும், அதனை போட்டுக் கொடுப்பதும் அதிமுக தான் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் கூறியதாவது: ஆளுங்கட்சியினர் எதிர் கட்சியினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். அதிமுக-வினரே திமுக கூட்டணி நிர்வாகிகள் இடத்தில் பணத்தை பதுக்கி வைத்து விட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகளை கொண்டு போலியான அவப்பெயரை அரங்கேற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.

election commission

முதல்வர் உறவினர் வீடுகளில் எங்கெங்கு பணம் உள்ளது என்பதை பற்றிய தகவலை கொடுக்க நான் தயார் சோதனையிட தேர்தல் ஆணையம் தயாரா? என கேள்வி எழுப்பிய வேல்முருகன், காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் உதவியோடு அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்கின்றனர். இந்திய அரசு தேர்தல் ஆணையம் தமிழக அரசு மூன்றும் கூட்டு செய்து திமுக கூட்டணியை ஒழிக்க பார்க்கிறது என்றும் சாடினார்.

மேலும் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் தலைவர் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை. அனுமதியை மீறி பரப்புரை மேற்கொள்வேன். மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் தமிழக மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த துடிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பவுமே இந்த கூட்டணி.

flying squad

அதிமுக-வை மிகவும் அவதூறாக பேசிய பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்தவர் ராமதாஸ். வன்னியர் அறக்கட்டளை சொத்து விவகாரத்தில் ஸ்டாலின் அறிக்கைக்கு பதிலளித்த ராமதாஸ் குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. ராமதாஸ் அரசியலை விட்டு வெளியேற தயாரா அரசியல் பாதை குறித்து ஒரே மேடையில் ராமதாஸ் என்னுடன் விவாதிக்க தயாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

ramadoss

பாமக மற்றும் வன்னியர் வரலாறு தெரியாத பசங்களுக்கு சம்பளம் கொடுத்து என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி பரப்பி வருகிறார் ராமதாஸ். பல்வேறு மத்திய அரசு பதவிகளில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். இந்தியாவில் நரேந்திர மோடி ஹிட்லர் ஆட்சியை செய்து வருகிறார் எனவும் வேல்முருகன் அப்போது தெரிவித்தார்.

இதையும் வாசிங்க

கோவை சிறுமி வழக்கு: போலீசாரை மீறி குற்றவாளியை அடித்து உதைத்த மக்கள்! கோவையில் பரபரப்பு!

2018 TopTamilNews. All rights reserved.