• July
    18
    Thursday

Main Area

Main



மீண்டும் இணைந்த ரம்மி பட கூட்டணி! இந்த முறையும் ஜெயிக்குமா?

விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்
விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்
Loading...

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்ம துரை போன்ற படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்த படமும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மற்ற படங்களைப் போல் கிராமப்புற பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகிறது. 

க/பெ.ரணசிங்கம் என்று பெயரிட்டுள்ள இப்படத்தை பி.விருமாண்டி இயக்குகிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை அறம், ஐரா, தும்பா போன்ற படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 


 

2018 TopTamilNews. All rights reserved.