பிரச்சார களத்தில் கேப்டன் விஜயகாந்த்! தொண்டர்களை பார்த்து கையசைத்தார்

 

பிரச்சார களத்தில் கேப்டன் விஜயகாந்த்! தொண்டர்களை பார்த்து கையசைத்தார்

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இருந்த தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறியது. தற்போது அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன தேமுதிகவுக்கு கும்மிடிப்பூண்டி, திருத்தணி ,ஆவடி ,வில்லிவாக்கம் ,திருவிக நகர் ,எழும்பூர் தனித்தொகுதி, விருகம்பாக்கம் ,சோழிங்கநல்லூர், பல்லாவரம் ,செய்யூர் தொகுதி, மதுராந்தகம், ஊத்தங்கரை ,பாலக்கோடு, பென்னாகரம் ,ஆரணி,மயிலம் ,திண்டிவனம், திருக்கோவிலூர் ,கள்ளக்குறிச்சி ,நாமக்கல், சேலம் ,குமாரபாளையம் உள்ளிட்ட 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. இருப்பினும் அவர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என பிரேமலதா விஜயகாந்தும், விஜய பிரபாகரனும் தொடர்ந்து கூறிவந்தனர்.

Image

இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். கும்மிடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து விஜயகாந்த் வாக்குசேகரித்தார். முரசு சின்னத்தில் வாக்களிக்கக்கோரி விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் களத்தில் விஜயகாந்தை பார்த்ததால் தொண்டர்கள் உற்சாகத்தில் கேப்டன் என முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து திருத்தணி செல்லும் விஜயகாந்த், அங்கு போட்டியிடும் வேட்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். பிரச்சாரத்திற்கு முகக்கவசம் அணிந்துவந்த அவர், திறந்த வெளி பிரச்சாரத்தில் நின்றபடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார். ஆனால் எதுவும் உரையாற்றவில்லை.