• July
    20
    Saturday

Main Area

Main



திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா! சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
Loading...

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தின் மூலம் கோலிவுட்,டோலிவுட் என அனைவற்றிலும் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.அதைத் தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா போன்ற திரைப்படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

vijaydevarakonda

அதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் 4 மொழிகளில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இரண்டாவது முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இதில் ரஷ்மிக்கா நடித்துள்ளார். 

vijaydevarakonda

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஓய்வு எடுக்காமல் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் திடீரென்று காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு  காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விஜய் கூறுகையில், 'புதன்கிழமை காலை 6 மணி வரை ஷூட்டிங்கில் இருந்தேன். பிறகு காய்ச்சல் வந்து சோர்வாகிவிட்டேன். சீக்கிரம் குணமடைய வேண்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்' என்று கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளிவந்ததிலிருந்து அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


 

2018 TopTamilNews. All rights reserved.