• February
    18
    Monday

Main Area

Main

பகவத்கீதை பற்றி தவறாக பேசினேனா? விஜய் சேதுபதி விளக்கம்!

vijaysethupathi
vijaysethupathi
Loading...

சென்னை:  நடிகர் விஜய் சேதுபதி பகவத் கீதை குறித்து தான் தவறாக பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து ட்விட்டரில்  விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.நடிகராக மட்டுமின்றி சமூக பொறுப்புள்ளவராகப் பல சமயங்களில் நடந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு கருத்தை தெளிவாக சொல்வதில் கைதேர்ந்தவர் என்று கோலிவுட்டில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.

இவர் சமீபத்தில் சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் செயலி அறிமுக விழாவில் பேசினார். அவர் பேசியது தனியார் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியானது. அதை சிலர் போட்டோஷாப்பில் மாற்றி, பகவத் கீதை குறித்து விஜய் சேதுபதி கூறியதாக மாற்றி வெளியிட்டார்கள்.

அதில்,"பகவத் கீதை" ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம்'' என்று விஜய் சேதுபதி கூறியதாக போட்டோஷாப்பில் மாற்றப்பட்டு இருந்தது. இது வைரலாகப் பரவியது மட்டுமன்றி, பலரும் இக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்தக் கருத்து தொடர்பாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் ''என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத் கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை, பேசவும் மாட்டேன். சில சமூக விரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.

இதன்முலம் நடிகர் விஜய் சேதுபதியின் பகவத் கீதை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.