• June
    20
    Thursday

Main Area

Main



’கோஹ்லிய கட்டுப்படுத்தவே முடியாது...’ புகழ்ந்து தள்ளும் முன்னாள் ஜாம்பவான்..!

விராத் கோஹ்லி
விராத் கோஹ்லி
Loading...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னால் கேப்டனான பிரையன் லாரா தற்போது பேசிய பேட்டி ஒன்றில், ”இந்த உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இந்திய அணியின் கேப்டன் ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு ரன் மெஷின் என விராட் கோலியை புகழ்ந்துள்ளார்.Lara

 கோலி ரன்கள் சேகரிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று. அவருடைய ஆட்டம் 80 மற்றும் 90 களில் விளையாடிய வீரர்களை நினைவுபடுத்துகிறது.  என்னை பொருத்தவரை சச்சின் மிகச் சிறந்த ஒரு வீரர். ஆனால், அவருடன் கோலியை ஒப்பிட முடியாது. கோலியிடம் தனிப்பட்ட பல திறமைகள் உள்ளன. இளம் வீரர்களுக்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார் என நம்புகிறேன்.

 kohli


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் வேகம் அனைத்து அணிகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது. தற்போது வரை மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வழிகளை தேடி கொண்டிருக்கிறார்கள். நான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள நிலை இருந்தால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு விட்டுவிடுவேன். தற்போது பும்ரா சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார்’’ என லாரா தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.