• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

மாஸாக நடனம் ஆடும் தல தோனி: யாருடன் தெரியுமா? வைரல் வீடியோ!

dhoni

மும்பை: மகேந்திர சிங் தோனியும் அவரது மகள் ஸிவாவும் நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் போது தோனி கிடைக்கும் நேரத்தில் ஸிவாவோடு இருக்கிறார்.  அவ்வப்போது  தனது மகளுடன் உரையாடுவது, விளையாடுவது போன்ற  வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கபடுவது வழக்கம்.

அந்த வரிசையில் தோனி மற்றும் ஸிவா இணைந்து டான்ஸ் ஆடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் தனது செல்ல மகள் ஸிவா சொல்லிக் கொடுக்கும் நடன அசைவுகளை  தோனி பார்த்து ஆடுகிறார். இருவரின் நடனமும் மிகவும் அழகாக உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

முன்னதாக ராஞ்சியில் உள்ளூர் மைதானத்தில் நடந்த டென்னிஸ் போட்டியில் தோனி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

             
2018 TopTamilNews. All rights reserved.