• July
    17
    Wednesday

Main Area

Main



பரபரக்கும் தேர்தல் முடிவுகள்: கூலாக பியானோ வாசிக்கும் முதல்வர்: வைரல் வீடியோ!

மம்தா
மம்தா
Loading...

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. 

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி மக்களவைத் தேர்தல்   நிறைவடைந்தது.  இதை தொடர்ந்து இன்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. 

mamata

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது.  9.45 மணி நிலவரப்படி, பாஜக தற்போது 18 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தற்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி  டைமண்ட்  ஹார்பர்  தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். 

mamta

இந்நிலையில் மம்தா பானர்ஜி  பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 5 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், எந்தவித சலனமுமின்றி கூலாக அமர்ந்து  மம்தா பானர்ஜி  பியானோ வாசிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தேர்தல் முடிவை எண்ணி எதிர்க்கட்சிகள் பரபரப்பாக உள்ள சூழலில் மம்தா இந்த வீடியோவை வெளியிட்டு எதிர்க்கட்சியினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.