• July
    19
    Friday

Main Area

Main



மிளகு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

மிளகு
மிளகு
Loading...

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு, தங்க பஷ்பத்திற்கு சமம். நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் நீக்கி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி தருகிறது. தொடர்ந்து குறுமிளகைச் சாப்பிட்டு வந்தால், சிந்திக்கும் ஆற்றலும்,செயல்களை செய்து முடிக்கும் திறனும் சீராகிறது.  உணவை நன்கு செரிக்கவைத்து செரிமான உறுப்புகளை புதுப்பிக்கிறது. மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.

pepper

சளியுடன் கூடிய ஜலதோஷத்திற்கு மிளகுத் தூளுடன், மஞ்சள் தூளையும்  சேர்த்து பாலில் கலந்து மூன்று நாட்கள் அருந்திவர காய்ச்சலுடன் கூடிய ஜலதோஷம் கட்டுப்படும்.


ஞாபகசக்தி:
brain

மந்தமாகவும், சோம்பேறித்தனமாகவும் உள்ள குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் தேனில் மிளகுத்தூளை கலந்து கொடுத்து வர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
பல்வலி
பல் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் மிளகுத்தூளுடன் , உப்பை கலந்து பல்தேய்த்து வர நாட்பட்ட பல்சொத்தை, ஈறுகளில் இரத்தம் வடிதல், ஈறுகளில் வலி, வீக்கம் அனைத்திலும் நல்ல குணம் காணலாம்.


உடல் வலிமை
body

புதுமணத்தம்பதியினர் தினசரி பாதாம் பருப்புகளுடன் மிளகையும் சேர்த்து பாலுடன் சாப்பிட்டுவர உடல் வலிமை பெறுவதோடு ஆரோக்கியமான குழந்தைபேற்றுக்கு வழிவகுக்கும்.
உடல் வலி
சுளுக்கு, உடல்வலி, வாத வீக்கம் போன்றவைகளுக்கு மிளகுத்தூளை இளஞ்சூடான நல்லெண்ணெய் விட்டு பற்றுபோட விரைவில் குணம் காணலாம்.


விஷக்கடி
poison bite

அருகம்புல் சிறிது, மிளகு சேர்த்து கசாயம் வைத்து குடித்து வர அனைத்து விஷக்கடிகளும் முறியும்.
வெற்றிலைச்சாறு, மிளகு சேர்த்து கொதிக்கவைத்த நீரை குடித்து வர மருந்து மற்றும் உணவு முறைகளால் உருவான குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.


பூச்சிவெட்டு
hair

தலைமுடி உதிர்ந்து உண்டான வழுக்கை மற்றும் பூச்சி வெட்டுகளில் இருந்து குணமடைய மிளகுத்தூளுடன்,வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர விரைவில் குணம் காணலாம்.

2018 TopTamilNews. All rights reserved.