10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியாவது எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்
Jul 22, 2020, 11:00 IST1595395847000
10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் ரூ.1.10 கோடி மதிப்பில் சார்பதிவாளர் கட்டடம் அமைக்கும் பணிகளைப் பூமி பூஜை செய்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“அடுத்த மாதம் முதல் வாரத்தில் 10ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த மாத இறுதிக்குள் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் பாராட்டு தெரிவித்துள்ளது. அவினாசி – அத்திக்கடவு திட்டம் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.